அதிகரிக்கும் விவாகரத்துகளுக்கு காரணமாகும் அந்தரங்க விடயங்கள். படித்து பகிருங்கள்…!!

உடல் ஆரோக்கியம்

இன்று எங்கு பார்த்தாலும் குறையாமல் இருக்கும் ஒன்று தான் விவாகரத்து.. காதல் திருமணமாக இருந்தாலும் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் விவாகரத்தில் தான் முடிகிறது. அன்று பெரும்பாலும் வாழவே முயற்சி செய்தார்கள் ஆனால் இன்று பிரிந்து வாழவே முயற்சி செய்கின்றனர்.ஆரம்பத்தில் பிடிக்கும் ஒருவர் சில நாட்களில் வெறுக்கப் படுகிறார்.

காதலிக்கும் போது அழகு என நினைக்கும் நபர் திருமணத்தின் பின் அசிங்கமாக தெரிகிறார். இதற்கான காரணம் என்ன நிஜத்தில் குறித்த நபர் அசிங்கமாக இருக்கிறாரா.? இல்லையா.? இன்று இதற்கான விளக்கத்தை பார்க்கப் போகிறோம். உண்மையில் ஆணோ பெண்ணோ திருமணத்தின் பின் தோன்றத்தில் அசிங்கமாக மாறுவதில்லை. ஆனால் அவர்களது செயற்பாடுகள் அசிங்கமாக மாற்றி விடுகிறது. காதலிக்கும் போது ஒரு முத்தத்திற்கு கெஞ்சிக் கொண்டிருக்கும் ஆண்கள் திருமணம் முடிந்த பின் தங்கள் தேவையை அனுமதியின்றியே நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

இங்கு ஆரம்பிக்கிறது ஆண்களின் அசிங்கம். அதே போல் பெண்கள் திருமணத்திற்கு முன்பு பல கதைகள் சொல்வார்கள். உன் சம்பளத்தில் சமாளிப்பேன் உன் தாயை என் தாயை போல் பாதுகாப்பேன். உன் சுதந்திரத்தை பறிக்க மாட்டேன் போன்ற வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள் ஆனால் திருமணத்தின் பின் இவை மாறிவிடுதால் ஆண்களின் கண்களுக்கு பெண்கள் அசிங்கமாகிவிடுகிறார்கள்.

பலரது வாழ்க்கை விவாகரத்தில் முடிவதற்கு கட்டில் சுகமே காரணமாகிறது. காரணம் ஒருவரது விருப்பத்தை இன்னொருவர் மீது கட்டாய படுத்துவது.. இதனால் எரிச்சலும் வெறுப்பும் ஏற்படுகிறது. இயற்கையை விட சில முரணான விருப்பங்களால் மண மற்றும் மன முறிவு ஏற்பட விவாகரத்தில் முடிகிறது திருமணங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *