அதிர்ஷ்ட லட்சுமியும் ராஜயோக குருவும் சேர்ந்து கதவ தட்டப்போற ராசி எதுனு தெரியுமா?

ஜோதிடம்

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம் தொழில் சம்பந்தமாக புதிதாக இயந்திரங்கள் வாங்கும் பணிகளில் துணிந்து இறங்குவீர்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீர்ந்து உடல் நலம் தேறுவீர்கள். மனதுக்குள் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்த தேவையில்லாத மனக் குழப்பங்கள் அனைத்தும் நீங்கி, அதற்கான தீர்வு கிடைப்பதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது கூடுதல் நிதானத்துடன் இருப்பது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட நுணுக்களையும் ரகசியங்களையும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம் பொது சேவை மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா செல்லத் திட்டமிடுவீர்கள். வீட்டுக்கு உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளால் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் ஏற்படும். வீட்டில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மிதுனம் கோவில் சம்பந்தப்பட்ட புனித காரியங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். செய்கின்ற தொழிலில் மேன்மை உண்டாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். உற்சாகமாக இருப்பீர்கள். நிர்வாகத் துறையில் இருக்கின்றவர்களுக்கு அனைவருடைய ஆதரவும் அனுகூலங்களும் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம்அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கடகம் வீட்டிற்கு உறவினர்கள் வருகை தருவார்கள். அதனால் வீட்டில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். நீங்கள் செய்யும் காரியங்களால் பொதுவெளியில் உங்களுடைய செல்வாக்கும் உங்கள் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும். விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகளில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவுகின்ற எண்ணம் மற்றும் சமூகப் பொறுப்புகள் மீது அதிக ஆர்வம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம்அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம் மாணவர்கள் கவனக் குறைவைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. பெற்றோர்களுடைய உடல் ஆரோக்கிய விஷயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பயணங்களின் வழியாக உங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வீட்டுக்கு புதிதாக வரும் நண்பர்களுடைய வருகையால் கொஞ்சம் விரயச் செலவுகள் ஏற்படும். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்களாக இருந்தால் கொஞ்சம் அலைச்சல்கள் ஏற்படும் வாய்ப்புண்டு. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

கன்னி உங்களுக்குப் புதிதாக வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான எண்ணங்கள் உங்களுக்கு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பாராத திடீர் யோகங்கள் கூட உங்களின் மூலம் உங்களுக்கு பண வரவுகள் உண்டாகும். உங்களுடைய உறவினர்களின் மூலம் உங்களுக்கு இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நன்மை உண்டாகும். கால்நடைகள் வளர்ப்பவர்கள் அதனுடைய ஆரோக்கியம் மற்றும் சுகாதார விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையில் இருக்கின்றவர்கள் உங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம் வீட்டில் தாய்வழி உறவினர்களுடைய வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். இதுவரை இருந்துவந்த சின்ன சின்ன காரியத் தடைகள் யாவும் நீங்கும். மனதில் இருநு்த தேவையற்ற குழப்பங்களைத் தூக்கி தூரப் போடுங்கள். செய்கின்ற செயல்களில் முழு கவனத்தையும் செலுத்தினால் வெற்றி உங்கள் பக்கம் வரும். எந்திரங்களில் பணிபுரிகின்றவர்களாக இருந்தால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல திட்டிட்டிருந்தவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். நண்பர்களுடன் பயணங்கள் மேற்கொள்வீர்கள். மனம் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டில் உள்ள கணவன், மனைவிக்கு இடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றி மறைந்து விடும். உங்களுடைய வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம்அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு உங்களுடன் உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். சமூக சேவைகளில் ஈடுபடுகின்றவர்கள் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கூடுதல் அலைச்சல்கள் ஏற்படும். பொன், பொருள் சேர்ப்பதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் தோன்றி மறைய ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம்அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

மகரம் தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் உங்களுடைய எண்ணங்கள் ஈடேற ஆரம்பிக்கும். மனதுக்குள் இருந்து ஒரு ஓரமாக இருந்து வந்த தன்னம்பிக்கை எல்லாம் துளிவிட ஆரம்பிக்கும். உங்களுடன் பிறந்த சகோதரர்கள் மூலம் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு சின்ன சின்ன தடைகளும் நீங்க ஆரம்பிக்கும். மனதுக்குள்ளே போட்டு வைத்துக் கொண்டிருந்த விஷயங்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் மனம் லேசாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கும்பம் வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து வந்த சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் குறந்து கொஞ்சம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு முன்பை விட பல மடங்கு உயர ஆரம்பிக்கும். பொன், பொருள் சேர்க்கைகள் ஏற்படும். அதற்கான உதவிகளையும் பெறுவீர்கள். கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர ஆரம்பிக்கும். தொழிலில் பெரும் லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம்அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.

மீனம் சந்திராஷ்டமம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய மனதுக்குள் இருந்து வந்த பலவிதமான சிந்தனைகளுக்குள் மூழ்கிப் போவீர்கள். மனதில் இருக்கின்ற கவலைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் ஆறுதல் கிடைக்கும். பயணங்களின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பதற்குக் கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம்அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *