ஆட்டோ ஓட்டுநருக்கு காதல் தொல்லை கொடுத்த பிரபல நடிகை..!

சினிமா

செய்தித்தாளில் பெண் ஒருவருடன் தன்னை தொடர்பு படுத்தி வெளியான செய்தியைப் பார்த்து, அதிர்ந்து போயிருக்கிறார் சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக். இதனால், தனக்கு ஏதாவது பிரச்சினை வருமோ என்று அஞ்சிய அவர், உடனடியாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார் தெரிவித்துள்ளார். 

பெண்களை, இளைஞர்கள் விரட்டி விரட்டி காதலிப்பதை கேள்விப்பட்டும், பார்த்தும் இருக்கலாம். சில நேரங்களில், பெண்கள் கூட ஆண்களை விரட்டி விரட்டி காதலிப்பது உண்டு. ஆண்களை பெண்கள் விரட்டும் காதல் கதைகள் ரொம்பவே அபூர்வம். இத்தகைய அபூர்வ காதல் கதைகளை சினிமாக்களில் மட்டுமே அதிகமாக பார்க்க முடியும். இப்படி ஒரு அபூர்வ காதலில்தான், நடிகை ஒருவரின் பணிப்பெண் விழுந்துள்ளார். அந்த பெண்ணின் துரத்தலால், ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் பெரும் மன உளைச்சலில் சிக்கித் தவித்து வருகிறார்.

நடிகை மவுனிகா வீட்டில் சில மாதங்களுக்கு முன் கார்த்திக் என்பவர் ஓட்டுநர் வேலைக்குச் சென்றுள்ளார். ஒரு வகையில் கார்த்திக், மவுனிகாவின் உறவினரும் கூட. ஒரே வீட்டில் வேலை செய்வதால், மவுனிகா வீட்டில் வேலை செய்த பணிப் பெண்ணுடன், அவர் நட்பாக பழகியதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண் கார்த்திக்குக்கு காதல் வலை வீசியதாக தெரிகிறது. அந்த காதலை ஏற்க மறுத்த கார்த்திக், தமக்கு வீட்டில் பெண் பார்ப்பதாக கூறி தப்பிக்கப் பார்த்துள்ளார். ஆனால், விடாமல், தமது காதலை ஏற்றுக் கொள்ளுமாறும், தம்மை திருமணம் செய்துகொள்ளுமாறும் அந்த பெண் கார்த்திக்கை வற்புறுத்தி வந்துள்ளார்.

நடிகை மௌனிகா

இந்த விவகாரம் இப்படியே சென்று கொண்டிருந்த நிலையில், கார்த்திக்கை, நடிகை மவுனிகா வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். இத்துடன் தொல்லை தீர்ந்தது என்று நினைத்துக் கொண்டு, ஆட்டோ ஓட்டி வந்துள்ளார் கார்த்திக். ஆனால், விடாது கருப்பு கதையாக, செல்போனில் தொடர்பு கொண்டு, காதல் டார்ச்சர் செய்யத் தொடங்கியுள்ளார் நடிகையின் வீட்டு பணிப்பெண். தம்மை திருமணம் செய்துகொள்ளாவிட்டால், கையை அறுத்துக் கொள்வேன், தற்கொலை செய்து கொள்வேன் என அவர் மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் தனது பாட்டியுடன்

இந்த விவகாரம் தொடர்பாக, நடிகை மவுனிகாவும் பேசியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், தாம் யாரையும் மிரட்டவில்லை என நடிகை மவுனிகா தெரிவித்துள்ளார். மேலும் இந்த பிரச்சினை பேசி தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் போலீசார் இருதரப்பிலும் உரிய விசாரணை நடத்தி, உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *