கலவியின் போது தெரியாமகூட செய்யக்கூடாத எட்டு விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

உடல் ஆரோக்கியம்

உடலுறவின் போது என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் யோசிக்கும் பலரும் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது தெரியாமல் சொதப்பி வைப்பதுண்டு. உறவில் ஈடுபடும் சமயத்தில் தெரியாமல் கூட செய்துவிடக் கூடாது சில விஷயங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

​கலவி காலம்

samayam tamil

உடலுறவு என்பது முற்றிலும் மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். இருவருக்கும் ஆனந்தத்தை தரக்கூடியது. இந்த உடலுறவு என்ற மகிழ்ச்சியான நேரத்தை பலரும் சில சமயம் சங்கடமான விஷயமாக மாற்றி விடுகிறார்கள். உடலுறவு சம்பந்தப்பட்ட நேரங்களில் நாம் சில விஷயங்களை அறவே தவிர்த்து ஆக வேண்டும். அது நம் உறவைக் கெடுத்துவிடும் நல்ல இனிமையான நேரங்களை பாழாக்கிவிடும். அப்படி செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

​அனுமதியைப் பெற்றுக் கொள்ளுங்கள்

samayam tamil

நீங்கள் உடலுறவுக் என்று உபயோகப்படுத்தக் கூடிய சில பொருள்களை உங்கள் துணைக்கும் உபயோகம் செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு பல நாள் கனவாக இருக்கலாம். அதை வைத்து உங்கள் துணையை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட விஷயங்களை செய்வதற்கு முன்பு உங்கள் துணையிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். சிலர் அது போன்ற பொருட்களை உபயோகிப்பதை விரும்பமாட்டார்கள். எனவே அதை அவர்கள் முழு அனுமதி பெற்று பிறகு செய்ய வேண்டும்.

 

​வசதி மிகவும் முக்கியம்

samayam tamil

நீங்கள் எது செய்தாலும் அவர்களுக்கு அது விருப்பமா என்று கேட்டு செய்ய வேண்டும். அது மட்டுமில்லாமல் வசதி மிகவும் முக்கியமாக இருக்க வேண்டும். உடலுறவு என்பது முழுக்க முழுக்க மகிழ்ச்சியான தருணங்களை கொண்டது. அதை அசௌகரியமான காரியமாக மாற்றிவிடக் கூடாது. புதிய புதிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று உங்கள் துணைக்கு கஷ்டத்தை கொடுக்கக்கூடாது.

சில பேர் சில விதமான வித்தியாசமான நிலைப்பாட்டில் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துவிட்டு துணைக்கு முடியாதவாறு கஷ்டமான நிலைப்பாட்டில் உடலறவு வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதுபோன்று செய்வதை முடிந்த அளவு குறைத்துக் கொள்ள வேண்டும். எனவே எந்த நிலையில் இருந்து உடலுறவு செய்ய வேண்டும் என்பதை விட. எந்த அளவுக்கு வசதியாக இருந்து உடல் உறவை மேற்கொள்ள வேண்டும் என்பதே முக்கியம். வசதியுடன் உடல் உறவு கொள்ளும் போது தான் முழு திருப்பியும் இருவருக்கும் கிடைக்கப்பெறும்.

​ஆபத்தான பொருட்களை புறந்தள்ளுங்கள்

samayam tamil

உடலுறவு கொள்ளும் படுக்கையின் அருகில் கூர்மையான பொருட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும். கத்தி. ஊசி போன்ற விஷயங்கள் உடலுறவு செய்யும் மெத்தைக்கு அருகிலோ அல்லது மெத்தையிலோ இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சில சமயம் உடலுறவு நேரங்களில் நம்மையும் மீறி நாம் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது கைகள் கூர்மையான பொருட்கள் மீது பட்டு காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே இருக்கும் இடங்களையும் பார்த்து கவனமுடன் நடந்து கொள்வது மிகவும் அவசியம்.

 

​பழசை பேசவேண்டாம்

samayam tamil

உடலுறவு செய்வதற்கு முன்பு, சிலர் பழைய விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். நாம் அப்படி இருந்தோம், அல்லது நீ அப்படி இருந்தாய் இப்படி மாறிவிட்டாய் என்று பல பேசிக்கொண்டிருப்போம். சிலசமயம் நாம் பேசிக்கொண்டிருப்பது நமக்கு எதிராகவே திரும்பி விடும். பழசை பேசப்பேச சில நல்ல விஷயங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் பழைய விஷயங்களில் ஒரு சில கெட்ட விஷயங்களும் நடந்து இருக்கும்.

நீங்கள் ஏதாவது பேச அதில் இருந்து உங்கள் துணை ஒரு குறையைக் கண்டுபிடித்து அதை பேச ஆரம்பித்துவிட்டால், நீங்களும் அதற்கு பதில் கூறி, உங்களது உடல் உறவு கனவு பாழாகி விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே உடலுறவு சமயத்தில் பழைய விஷயங்களை கிளற வேண்டாம் என்பது எங்களுடைய கருத்து. நடக்கக் கூடிய நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே பேச வேண்டும். அவர்களுக்கு நல்ல உணர்ச்சியை தூண்டும் அளவுக்கு பேச வேண்டும்.

​அதிகமாக பேசக்கூடாது

samayam tamil

உடலுறவு வைப்பதற்கு முன்பு சிறிதளவு பேச்சுவார்த்தை என்பது தேவைதான் அவர்களின் மனநிலையை நல்ல முறையில் கொண்டு வர. அவர்களை மகிழ்ச்சியாக்க, அவர்களின் உணர்ச்சியை தூண்டுவதற்கு, பேச வேண்டும். ஆனால் பேசிகொண்டே இருந்துவிடக்கூடாது. அதிக நேரம் பேசிக் கொண்டே இருந்தால் அவர்களுக்கு வரக்கூடிய உணர்வும் வராமல் போய்விடும்.

மாறாக உங்கள் பேச்சைக் கேட்டு தூக்கம் வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. உடலுறவு சமயத்தில் அவள் உங்களிடம் சில விஷயங்களை எதிர்பார்ப்பார்கள் அதை நாம் நிறைவேற்ற வேண்டும். அதிகமாக பேசி கொண்டு இருப்பதனால் அவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போய்விடும். எனவே உங்களது உடலுறவு கனவு அன்று நடக்காமல் போய்விடும். எனவே குறைவாகப் பேசி நடந்து கொள்ள வேண்டும்.

 

​உடலுறவு படம் பிடிக்கக்கூடாது

samayam tamil

இன்றைய காலகட்டங்களில் பலருக்கும் இந்த கெட்ட பழக்கம் என்பது இருக்கின்றது. தாங்கள் உறவு கொள்வதை இருவருமே படம் பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதுவும் சிலர் தன் துணைக்கு தெரியாமல் ரகசியமாக படம்பிடித்து, பின்னர் அதை பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம். என்றாவது ஒருநாள் நீங்கள் உறவு கொண்டதை படம்பிடித்தது அவர்களுக்கு தெரிய வந்து விட்டால் நிச்சயமாக உங்கள் இருவரின் உறவும் முடிந்து போகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இன்னும் இதில் பல சிக்கல்கள் உள்ளது.

ஒருவேளை நீங்கள் உங்கள் செல்போனில் நீங்கள் உறவு கொண்டதை படம் பிடித்து வைத்து இருந்தால், நீங்கள் உங்கள் மொபைல் போனை விற்க வேண்டுமென்று சூழல் ஏற்படும்பொழுது அழித்துவிட்டு கொடுத்திருந்தாலும், அழிந்து போன படங்களை, மீண்டும் கொண்டு வருவதற்கு பல விதமான சாப்ட்வேர்கள் சந்தையில் கிடைக்கின்றன. அது மிகப் பெரிய ஆபத்தில் போய் முடிந்து விடும். உறவு கொண்ட வீடியோ படங்கள் உலகம் முழுவதும் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

 

​சமூக வலைத்தளங்களை ஓரமாக வையுங்கள்

samayam tamil

பலர் உறவுகொள்ளும் பொழுது அல்லது கொள்வதற்கு முன்பு, வழக்கம் போல தங்களுடைய மொபைல் போனில் உள்ள சமூகவலைத்தளங்களின் நோட்டிபிகேஷன்களை பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். நாள் முழுவதும் நம் மொபைல் போனில் உள்ள சமூக வலைத்தளங்களில் தான் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். உறவுகொள்ளும் அந்த மகிழ்ச்சியான தருணங்களின் போது சமூக வலைத்தளங்களை உபயோகம் செய்வதை தவிர்த்தல் மிகவும் நல்லது.உங்கள் துணை உறவின் பொழுது அவர்களின் மேலே முழு கவனமும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

நீங்கள் உங்கள் மொபைல் போனில் பாதி கவனத்தை வைக்கும் பொழுது, அவர்களுக்கு உங்கள் மேல் ஒரு சிறிய வருத்தம் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் உங்களின் மனநிலையை பாதிக்கக் கூடும். வரும் நோட்டிபிகேஷன்களை பார்ப்பதினால் அது நல்லவையா கெட்டவையா என்பதை நீங்கள் கணிக்க முடியாது. ஒருவேளை உங்களுக்கு கவலை தரக்கூடிய செய்திகளை நீங்கள் பார்த்து விட்டால், அன்றைய நாளே வீணாய் போடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே உறவுகொள்ளும் பொழுது உங்கள் மொபைல் போனை சற்று தள்ளிவைப்பது நல்லது.

 

​போன் பேசுவதை தவிர்க்க வேண்டும்

samayam tamil

ஒரு சிலர் உறவு கொண்டு இருக்கும்பொழுது போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்ய மாட்டார்கள்.ஏதாவது முக்கியமான அழைப்புகள் வந்து விடும் என்ற அச்சத்தில் அதை சுட்ச் ஆஃப் செய்யாமலேயே வைத்திருப்பார்கள். நீங்கள் உறவு கொண்டிருக்கும் அந்த சமயத்தில் ஏதாவது அழைப்பு வந்தால் அதை எடுப்பது முற்றிலும் தவிர்க்க வேண்டும். முக்கியமான அழைப்பு வரும் என்று வைத்திருந்தால் தேவையில்லாத அழைப்புகள் வந்து உங்கள் மனநிலையை பாதிக்கக் கூடும்.

மேலும் முக்கியமான அழைப்புகள் வந்து உங்களை உடனே வரச் சொன்னால் உங்களால் உடனேயே செல்ல முடியாத சூழ்நிலையும் இருக்கும். எனவே உடலுறவின் போது முடிந்த அளவு தொலைபேசி அழைப்பை தவிர்ப்பது நல்லது. மேலும் நீங்கள் உடலுறவு கொண்டு இருக்கும் பொழுது தொலைபேசி பேசுவதினால் உங்கள் துணை அதை விரும்ப மாட்டார்கள். அவர்கள் மேலே முழு கவனமும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் நீங்கள் உங்கள் தொலைபேசி மீதுள்ள கவனம் அவரை மனதளவில் பாதிக்க செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *