காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 17 வயது மாணவியை கர்ப்பமாக்கிய 19 வயது இளைஞன்..!! பின் நடந்த விபரீதம்….

குற்றம்

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஒருவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், குறித்த சிறுமி வயிற்று வலியால் துடி துடித்த நிலையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒன்றில் பெற்றோர்கள் அனுமதித்துள்ளனர். மருத்துவ பரிசோதனையில் குறித்த சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்ததால் மகளிர் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில், சிறுமியையும், அவரது தாயையும் விசாரணை மேற்கொண்ட பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. குறித்த விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம் பரசேரியை அடுத்த மணக்கரை கிராமத்தை சேர்ந்த சிறுமி, அவரது பக்கத்து வீட்டில் இருக்கும் அண்ணன் முறையான 19 வயதுடைய இளைஞனுடன் பழகி வந்தார்.

நாகர்கோவிலிலுள்ள தனியார் கலை கல்லூரியில் வரலாறு பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் சஞ்ஜீவ் சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இதனால் பெற்றோருக்கு தெரியாமல் சிறுமி குறித்த இளைஞருடன் நெருங்கிப் பழகியுள்ளார். நாளடைவில் பெற்றோருக்கு தெரியவரவே இருவரையும் கண்டித்துள்ளனர். அதனால் பெற்றோருக்கு தெரியாமல் தனிமையில் பழகி வந்த நிலையில், குறித்த சிறுமி கர்ப்பமாக இருக்கும் விடயம் பெற்றோருக்கு தெரிய வர கருக்கலைப்பு செய்ய மருத்துவமனைக்கு வந்தனர். இந்த தனியார் மருத்துவமனை மருத்துவர், மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிறுமியை அனுப்பியுள்ளது பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளத

அண்மையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான இளைஞர் சஞ்சீவை பொலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கர்ப்பமடைந்த மாணவி ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *