கொலையில் சென்று முடிந்த I Love You மெசேஜ்..!

குற்றம்

செல்போனில் இளம்பெண்ணுக்கு I Love You என மெசேஜ் அனுப்பியதால் சேலம் அருகே ஒரு கொலை அரங்கேறியுள்ளது.

சேலம் அருகே சந்தியூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு செல்போனில் I Love You என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் அதே  உறவினரான ரமேஷ் என்பவரிடம் இது குறித்து கூற, ஆத்திரத்தில் ரமேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஸ்ரீநாத்தை தாக்கியுள்ளார். காயமடைந்த ஸ்ரீநாத் இரு சக்கர வாகன பட்டறை உரிமையாளரான மகேஷ் என்பவரிடம் ரமேசும் அவரது கூட்டாளிகளும் தன்னை தாக்கியதாகக் கூறியுள்ளார்.

இதனால் மகேஷ், ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை அழைத்து, ஸ்ரீநாத்தை ஏன் தாக்குனீர்கள் எனவும் ஸ்ரீநாத்தை தாக்கினால் நான் உங்களை தாக்குவேன் என்றும் கூறி எச்சரித்துள்ளார். இதனால் ரமேஷும் அவரது கூட்டாளிகளும் மகேஷ் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.

m

இந்நிலையில் மல்லூர் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் பங்கேற்றுவிட்டு நள்ளிரவில் மகேஷ் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தாழம்பூ ஏரி பகுதியில் மகேஷை, ரமேசும் அவரது கூட்டாளிகளும் வழிமறித்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் மகேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து மகேஷின் கழுத்தை கத்தியால் அறுத்து துடிக்கத் துடிக்கக் கொலையும் செய்துள்ளனர்.

பின்னர் ரமேஷும் அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மல்லூர் காவல் நிலைய போலீசார் மகேஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ரவி, விஜயகுமார், ஜீவா, சுந்தரம், சபரி, சக்தி ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இளம்பெண்ணுக்கு செல்போனில் I Love You மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் இரு சக்கர வாகனப் பட்டறை உரிமையாளர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *