சனி பவனின் வக்கிர பார்வையில் இருந்து விடுபட தினந்தோறும் இதை செய்தால் போதுமாம்!

ஜோதிடம்

மாதங்களில் சிறந்த மாதமாக வைகாசி மாதம் விளங்குகிறது. இந்த வைகாசி மாதம் அமாவாசை நாளில் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த புனித நாளில் சனி பகவானை உள்மனதுடன் வணங்குவதோடு ஏழை, எளியவர்களுக்கு இயன்ற அளவு தானம் செய்தால் நன்மை உண்டாகும். ஜென்மசனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டக சனி மற்றும் ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தோஷம் நீங்கி அமோக நன்மைகள் உண்டாகும்.

ஒவ்வொரு வருடமும் மே மாதம் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமைசனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மே மதம் 21 ஆம் திகதி வியாழன் இரவு 10.41 மணிக்கு அமாவாசை திதி தொடங்கி மே 22 ஆம் திகதி இரவு 11.54 மணிவரைக்கும் அமாவாசை திதி உள்ளது. சனி பனிவனின் ஜெயந்தி நாளில் சனி ஹோரையில் சனி பகவானை நினைத்து பூஜை செய்து வழிபடலாம். நம்மால் முடிந்த அளவிற்கு தானம் தர பாதிப்புகள் நீங்கும்.

ஜோதிட சாஸ்திரத்தில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனீஸ்வரர் தான். இவர் நியாயவான், தர்மவான், நீதிமான் என அழைக்கப்படுவார். சங்கடங்களை தீர்க்கும் சனீஸ்வரன் என்றும் கூறுவர். ஆயுள், ஆரோக்கியம், செல்வம், தொழில் போன்றவற்றை அள்ளி அருள்பவர் சனீஸ்வர பகவான் தான். சாதாரண தொழிலாளியை கூட மிகப் பெரிய தொழிலதிபராக ஆக்கும் சக்தி சனீஸ்வரருக்கு உண்டு. சர்வ அதிகாரம் படைத்தவராக இருந்தாலும், கர்ம வினைப்படி அவர்களை துன்பத்திற்கு ஆளாக்கக்கூடியவரும் இவர் தான்.

சனி தோஷம்
சனி பகவான் நம் ஜாதகத்தில் நல்ல பலம் பொருந்தி இருந்தால் ஆயுள், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வர்யம், பட்டம், பதவி தானாக தேடி வரும். தன்னுடைய திசா புக்தி காலங்களில் பல ஏற்றங்களை வழங்குவதில் சனிக்கு நிகர் சனி தான். அது போன்று கோச்சார பலன்கள் தருவதிலும் வலிமை மிக்கவர். ஏழரை சனி, கண்ட சனி, அட்டம சனி, அர்த்தாஷ்டம சனி என்று ஒவ்வொருவருக்கும் 30 வருடங்களுக்குள் பல விதமான கோச்சார பலன்களை தருகிறார்.

தொழில் காரகன் சனி
உங்கள் கை விரல்களில் சனி பகவான் விரல் நடு விரலாகும். நடு விரலுக்கு கீழே உள்ள மேடு சனி பகவானின் மேடாகும். தொழில் காரகன் கர்ம காரகன் ஆன சனி நபர் ஒருவரின் ஜாதகத்தில் ஆட்சி பெற்றால் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் கொண்டவர், ஒருவரின் ஜாதகத்தில் சனி உச்சம் பெற்றால் அவரின் தொழில் துறையில் சாதனை படைப்பவராகவும் நீதிமானாக விளங்குவார்.

சனி ஜெயந்தி பரிகாரம்
உங்கள் மீது சனி பகவானின் வக்கிர பார்வை விழுந்தால் அந்த பார்வையில் இருந்து தப்பிக்க சனியின் வாகனமான காகத்திற்கு தினந்தோறும் சாதம் வைக்க வேண்டும். உளுந்து தானியம் தானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை வேளைகளில் குளித்து விட்டு சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் போட வேண்டும். எளியவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும்.

பரிகாரம் செய்யுங்கள்
மற்றவரின் மனைவியை அபகரித்ததால் அவரின் கணவரால் ஏற்படும் சாபத்தினாலும், நயவஞ்சகத்தால் ஏமாற்றப்பட்ட ஒரு ஏமாளியின் சாபத்தாலும் புத்திர தோஷம் ஏற்படும். வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்வதாலும், கோயில்களில் உழவாரப் பணி செய்வதன் மூலமும், ஏழை உடல் ஊனமுற்றோருக்கு கைத்தடி, சைக்கிள் தானம் செய்யலாம். இந்த சனி ஜெயந்தி அன்று சனிபகவான் அருள் வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *