சற்று முன்னர் 100 பயணிகளுடன் வெடித்து சிதறிய பாகிஸ்தான் விமானம்! பாகிஸ்தான் விமான விபத்தில் 107 பேர் பலி..

செய்தி

பாகிஸ்தானில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் ஏறக்குறைய 100 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்ற பாகிஸ்தான் சர்வதேச எயார்லைன்ஸ் விமானமான ‘ஏ -320’ விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விமானத்தில் பயணித்த ஏறக்குறைய 100 பயணிகளின் நிலைக் குறித்து அறிவதற்காக, தற்போது மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சற்று முன்பு, மாடல் காலனிக்கு அருகிலுள்ள பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மாடல் காலனி என்பது கராச்சியில் ஜின்னா சர்வதேச விமான நிலையத்திலிருந்து வடகிழக்கில் இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ளது.
உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்ட செய்தியில், விபத்து நடந்த இடத்திலிருந்து புகை மற்றும் தீப்பிழம்புகள் எழும் காட்சிகள் தெளிவாக தெரிகின்றன.
https://twitter.com/_Mansoor_Ali/status/1263776441696649218

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *