செல்போனில் ஆபாச படங்களை பார்த்துக் கொண்டிருந்த கணவர்… அதை பார்த்த மனைவியில் கொடூர செயல்..!!

குற்றம்

தமிழகத்தில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஜாப்லின் என்பவர் சென்னையில் படித்த போது ஆர்.கே. நகர் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய கார்கி என்ற இளைஞனை உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளன. இருவரும் தூத்தூர் பகுதியில் தற்போது வசித்து வருகின்றனர். கார்கி சூப்பர் மார்க்கெட் ஒன்றை அப்பகுதியில் நடத்தி வந்தார்.

இந்நிலையில், திடீரென கார்கி வீட்டில் உயிரிழந்து கிடந்தார். அதைத் தொடர்ந்து அவரது மனைவி அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசாரிடம் கூறினார். ஆனால் கார்கியின் உடலில் காயங்கள் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, போலீசார் ஜாப்லினிடம் விசாரணை மேற்கொண்டார். குறித்த விசாரணையில் அண்ணன், அப்பாவுடன் சேர்ந்து ஜாப்லின் கணவரை கொன்றது தெரியவந்தது.

மனைவி ஜாப்லின் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:-

திருமணத்துக்கு பிறகு கார்கி என்னிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். நீண்ட நேரமாக செல்போனில் வேறு பெண்களுடன் பேசி வந்தார். அதை நான் பலமுறை கண்டித்தேன். ஆனால் அவர் அதை கேட்கவே இல்லை. சம்பவத்தன்று இரவு அவர் செல்போனில் ஆபாச படங்களை பார்த்துக் கொண்டிருந்தார். அதை பார்த்த நான் அவரிடம் வாக்குவாதம் செய்தேன். அப்போது அவர் என்னை தாக்கினார்.

குறித்த சம்பவத்தை எனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதேன். உடனே எனது தந்தை ஜோபாய், அண்ணன் ஜஸ்டஸ் ஆகியோர் எனது வீட்டிற்கு வந்தனர். ஆத்திரத்தில் எனது கணவரை சரமாரியாக தாக்கினார்கள். இதனால் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். கொலையை மறைப்பதற்காக எனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்து விட்டதாக நாடகம் ஆடினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *