திருமணமான முதல் நாளே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட புதுமண தம்பதி..!! தமிழகத்தில் நடந்த சோகம்..!!!

குற்றம்

தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் மேம்பட்டி சாமரிஷிகுப்பம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ராமதாஸ் என்ற இளைஞனும் வாணியம்பாடி புதூர் பூங்குளம் பகுதியைச் சேர்ந்த சுமித்ரா என்ற இளம் பெண்ணும் உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணமான முதல் நாளே புதுமண தம்பதியினர் (ராமதாஸ், சுமித்ரா ) ஆம்பூர் அடுத்த வீரவர் கோயில் பகுதியில் சென்னை – பெங்களூர் செல்லும் ரயில்வே மார்க்கத்துக்கு வந்தனர். அதன் பின்னர் தண்டவாளத்தில் படுத்த படி இருவரும் செல்பி எடுத்து கொண்டனர்.

அதையடுத்து புது தம்பதியினர் மனதை கல்லாக்கி கொண்டு தற்கொலை செய்ய முடிவெடுத்து தண்டவாளத்திலேயே படுத்திருந்த நிலையில் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் இருவர் மீதும் ஏறியதில் உடல் துண்டாகி இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் இருவரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், புது தம்பதியினரின் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *