” தீயிட்டு என்னை கொளுத்தியது போன்று இருந்தது, இறந்து மீண்டும் பிறந்துவிட்டேன் ” வித்தியாசமான அறிகுறிகளுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுமியின் அனுபவம்..!!

செய்தி

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் பெரியவர்களை விட சிறியவர்களுக்கு வித்தியாசமாக உள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது. இதனை சாதாரணமாக எடுப்பதால் தான் குழந்தைகளின் மரணம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குழந்தைகளை எப்படி கொரோனா வைரஸ் தாக்குகிறது என்பது தொடர்பில் 13 வயது சிறுமியான ஜாக் மெக்மரோ தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

நியூயார்க்கில் வசித்து வரும் ஜாக்கிற்கு திடீரென கையில் சிறு சிறு பருக்கள் தோன்றியுள்ளது. இதனை ஜாக் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார். சானிடைசர் பயன்படுத்துவதால் ஏற்பட்டுள்ள பருக்களாக இருக்கலாம் என ஜாக் நினைத்ததே அலட்சியத்திற்கு காரணமானது. அதன் பின் வயிற்று, வலி குமட்டல், ஏற்பட்டதை தொடர்ந்து பசியின்மை ஏற்பட்டுள்ளது.

இதனையும் பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்ட ஜாக்கிற்கு உணவின் சுவை, மற்றும் மணமின்மை ஏற்பட்டதுடன் காய்ச்சல் பிடித்துள்ளது. அத்துடன் மூச்சு விட முடியாமல் தவித்துள்ளார். உடனடியாக பெற்றோர் குடும்ப மருத்துவ மனையான வெயில்கர்னெல் மருத்துவ மனைக்கு எடுத்து சென்று கொரோனா பரிசோதனை செய்த போது கொரோனா இல்லை என்பதாக ரிப்போர்ட் வந்தது.

அங்கு சிறுமியின் இதயம் செயலிழக்க ஆரம்பித்ததை தொடர்ந்து மோர்கன் ஸ்டாலின் குழந்தைகளுக்கான மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப் பட்டார். அங்கு அவருக்கு கொரோனா உறுதி படுத்தப் பட்டதை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டார்.

அங்கு ஜாக்கை போல் பல சிறுவர்கள் குறித்த தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில் ஜாக்கின் இதயத் துடிப்பு நன்றாக குறைய ஆரம்பித்ததை தொடர்ந்து செயற்கை சுவாசம் மற்றும் அதி தீவிர சிகிச்சை என உயிரை காப்பாற்ற போராடி டாக்டர்கள் வெற்றி பெற்றனர். 1 வாரத்தின் பின் சாதாரண வார்ட்டுக்கு மாற்றப் பட்ட ஜாக் தற்போது வீட்டுக்கு அனுப்பப் பட்டுள்ளார்.

அத்துடன் தனிமை படுத்தப் பட்டு மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். இது குறித்து பேசியுள்ள ஜாக் இறந்து பிறந்ததாகவே நினைக்கிறேன். கொரோனாவால் பாதிக்கப் பட்டபோது என் உடம்பை தீயிட்டு கொளுத்துவது போன்று இருந்தது. உடலில் எரிச்சல் தாங்க முடியாமல் தவித்தேன். இந்த கொடுமை யாருக்கும் வர கூடாது என்றே என் மனம் வேண்டியது என தெதிவித்துள்ளார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *