நீச்சல் உடையில் கையில் சரக்கு பாட்டிலுடன் மிடுக்காக நின்று கொண்டிருக்கும் ஹன்ஷிகா…அதிர்ச்சியில் மிரண்ட ரசிகர்கள்

சினிமா

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்த நாயகி ஹன்சிகா மோத்வானி. தற்போது கேட்பாரற்று கிடக்கிறார் என்ற செய்தி ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை, எங்கேயும் காதல் போன்ற படங்களின் மூலம் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி அறிமுகம் ஆன புதிதிலேயே தனது கொழுக் மொழுக் தேகத்தினால் ரசிகர்களை கட்டிப் போட்டார்.

அதன் பிறகு தொடர்ந்து முன்னணி நடிகர்கள் விஜய், சூர்யா என ஜோடி போட தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக மாறி வந்தார். தெலுங்கிலும் இவரது மார்க்கெட் ஏறுமுகம்தான்.
இடையில் சிம்புவுடன் காதல் கிசுகிசு வேறு ஏற்பட்டது. ஆனால் சமீபகாலமாக ஹன்சிகாவை கண்டுகொள்ள ஆளில்லாமல் தவித்து வருகிறார். இளம் நடிகர்களுடன் ஜோடி போடுவதற்காக தனது உடம்பை பாதியாக குறைத்ததால் வந்த விளைவு என்கிறார்கள் ரசிகர்கள்.

ஹன்சிகாவிடம் அதிகமாக ரசிகர்கள் விரும்பியது அந்த பொசு பொசு உடம்பை தான். ஆனால் உடல் எடையை குறைத்த பிறகு எலும்பும் தோலுமாய் நோய் வந்த மாதிரி ஆகிவிட்டார் நம்ம ஹன்சிகா. அதுமட்டுமில்லாமல் கடைசியாக அவர் நடித்து ஹிட்டான படம் என்றால் அது ரோமியோ ஜூலியட்.

ஜெயம் ரவிக்கு கம்பேக் படமாக அமைந்த அந்த படம் பாக்ஸ் ஆபீஸில் செம ஹிட் அடித்தது. அதன்பிறகு ஹன்சிகா நடித்த போகன், 100, குலேபகாவலி, துப்பாக்கி முனை போன்ற படங்கள் எதுவுமே ரசிகர்களை கவரவில்லை. அதுமட்டுமல்லாமல் அடிமாட்டு விலைக்கு தள்ளப்பட்டுவிட்டார் ஹன்சிகா.

தற்போது மகா என்ற படத்தில் தனது முன்னாள் காதலர் சிம்புவுடன் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஓரிரு படங்கள் கைவசம் இருந்தாலும் மீண்டும் முன்னணி நாயகியாக ஹன்சிகா வலம் வருவதற்கு வாய்ப்பில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

பட வாய்ப்பு இல்லாதநடிகைகள் செய்யும் அதே வேலையைதான் அம்மணியும் செய்கிறார். அடிக்கடி, பிகினி மற்றும் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது ஒரு கையில் மதுக்கோப்பையை வைத்துக்கொண்டு மோனோகினி ரக பிகினி உடையில் நீச்சல் குளத்தில் நின்றபடி போஸ் கொடுத்து ஒவ்வொரு முறை சூரியன் மறையும் போதும் புத்தம் புதிய காலை வரத்தான் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *