பிரபல நடிகையின் மகன் பரிதாப மரணம்! திரையுலகத்தை கவலை ஆழ்த்திய சம்பவம்

சினிமா

தமிழ் திரையுலகில் புகழ் பெற்ற நிலையில் சிலர் சினிமா நடிகர்கள், நடிகைகள் இருந்திருக்கிறார்கள். அப்படியானவர்களின் ஒருவர் பழம்பெரும் நடிகை வாணி ஸ்ரீ.

இவர் வசந்த மாளிகை, புண்ணிய பூமி, ஊருக்கு உழைப்பவன், நல்ல தொரு குடும்பம் என பல படங்களில் நடித்தவர்.

சினிமாவை விட்டு விலகி சீரியல்களில் வாணி ஸ்ரீ நடித்து வந்தார். இந்நிலையில் அவரின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் நேற்று இரவு மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவருக்கு வயது 36. காலை வேளையில் படுக்கைவிட்டு எழுந்திருக்காமல் அவர் கிடந்ததால் சந்தேகமான குடும்பத்தினர் அவரை எழுப்ப படுக்கையிலேயே மரணம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக வதந்திகள் பரவ நடிகை வாணி ஸ்ரீ தரப்பு தூக்கத்தில் மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அபினவுக்கு ஒரு மகனும் 4 வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *