புதிதாக திருமணம் செய்யும் ஜோடிகளுக்காக தயாரிக்கப் பட்ட புதுவித மாஸ்க்..! வைரலாகும் புகைப்படம் இதோ..!!

வியப்பு

மாஸ்க் இன்றி அமையாது உலகு என்பது போல் ஆகிவிட்டது இன்றைய நாட்கள். உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் நோய் தொற்று காரணமாக பல நாடுகளில் மாஸ்க் போடுவது கட்டாயமாகப் பட்டுள்ளது. சுவாசத்தின் வழி பரவும் நோய் தொற்றுகளில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவே மாஸ்க் கட்டாயப் படுத்தப் பட்டுள்ளது.

இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளுக்காக விஷேட மாஸ்க் ஒன்றை கர்நாடகாவை சேர்ந்த நபர் ஒருவர் தயாரித்துள்ளார். கர்நாடகாவில் கொல்லாப்பூர் பகுதியில் நகை கடை வைத்திருக்கும் நபர் ஒருவரே கல்யாண ஜோடிகளுக்கான விஷேட மாஸ்கை வடிவமைத்துள்ளார். இது குறித்து பேசியுள்ள மாஸ்க் தயாரித்தவரான நகை கடை உரிமையாளர்.

இன்றைய நாட்களில் திருமணங்களிலும் கட்டாயமாக மாஸ்க் பயன்படுத்தும் அவசியம் இருக்கிறது. இதனால் திருமண ஜோடிக்காக விஷேடமாக மாஸ்க் தயாரிக்க நினைத்தேன், அதன் படி வெள்ளியில் மாஸ்க் தயாரித்தோம், இது பாதுகாப்பிற்கு அல்ல, மணமகள் மற்றும் மணமகனை அழகு படுத்துவதற்காக என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதன் விலை 2500 தொடக்கம் உள்ளதாக தெரிவித்துள்ளார். வெள்ளியின் பாரத்தை வைத்து விலை அதிகரிக்கப் படும் எனவும் தெரிவித்துள்ளார். இது போன்ற மாஸ்கில் கல் வைத்து புது விதமாகவும் தயாரிக்க முடியும் என்றும் அதற்கு ஏற்கனவே ஓர்டர் செய்திருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *