பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை! தாங்க முடியாமல் மகள் எடுத்த விபரீத முடிவு

குற்றம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேட்டூரை அடுத்த ஜலகண்டபுரம் ஆவடத்தூரை சேர்ந்த கூலித்தொழிலாளியான படவெட்டி என்பவருக்கு, மனைவி நளாவும், 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் படவெட்டியின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த ஜலகண்டபுரம் போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் படவெட்டி, மதுபோதையில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதனால் அவரது மகளே கிரைண்டர் கல்லால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மகள், மற்றும தாய் நளாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *