மார்டன் ஆடையில் அசத்தும் பிக் பாஸ் ஜூலி..! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!!

சினிமா

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாகி பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின் மக்களால் திட்டி தீர்க்கப் பட்டவர் ஜூலி. ஓவியாவிற்கு எதிரான செயல்கள் , மற்றும் பொய் போன்றவற்றால் வெறுக்கப் பட்ட ஜூலி வெளியே வந்ததும் சொல்றவங்க சொல்லுங்க நான் வெற்றியை தொட்டே தீருவேன் என சினிமாவில் சாதிக்க தொடங்கிவிட்டார்.

ஏற்கனவே சில திரைப்படங்கள் நடித்து முடித்துவிட்ட ஜூலி தற்போதும் சில திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். ஜூலி எப்போதும் சுடிதார், சாறி என அணியும் ஜூலி தற்போது மாடர்ன் ஆடைகளுக்கு மாறி விட்டார்.

பொதுவாக ஜூலி என்ன செய்தாலும் குறை கண்டுபிடித்து திட்டும் ரசிகர்கள் முழங்காலுக்கு மேல் ஆடை அணிந்தால் விடுவார்களா? உடனே திட்டி தீர்க்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் ஜூலி அணிந்திருக்கும் ஆடை சாதாரணமாக கிராமங்களில் இளம் பெண்கள் அணியும் கவுன் தான். அது அவருக்கு அழகாகவும் உள்ளது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *