வித்தியாசமாக திரட்டும் நிதி…! பிரபல நடிகையின் உயர்ந்த உள்ளம்…

சினிமா

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க, வரும் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். பலரும் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது ஏழை எளிய மக்கள்தான். ஏற்கனவே ஆயிரக் கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்று கொண்டிருக்கின்றனர். கொரோனாவை விட, பசியால் இறந்து விடுவோமோ என்ற பயம் அதிகரித்துள்ளது.

பிரபல நடிகையின் உயர்ந்த உள்ளம் popular actress to raise funds for corona in a different manner
இந்நிலையில் பிரபல நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது உயர்ந்த உள்ளத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவர் தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘லிங்கா’ படத்தில் நடித்த ஹீரோயின். ஏற்கனவே மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்களை வழங்கியிருக்கும் அவர், தற்போது ஏழை மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்க புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார்.

ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருக்கும் அவர் சிறப்பாக ஓவியம் வரையக்கூடியவராம். எனவே 10 ஓவியங்களை வரைந்து அதன் மூலம் கிடைக்கும் நிதியை ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் வாங்க பயன்படுத்த போவதாக அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஓவியமும் குறைந்தது லட்சக்கணக்கில் விற்க வாய்ப்பு இருக்கிறது. கொரோனா நேரத்தில் அவரது இந்த செயல் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *