வெளியூரில் தங்கி வேலை செய்து வந்த கணவன்… உள்ளூரில் வசித்து வந்த இளம் மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்

சினிமா

 

இந்தியாவில் கணவர் வெளியூரில் வேலை செய்து வந்த நிலையில் அவரின் மனைவி கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சோமேஷ்வர். இவர் மனைவி சந்தியா தேவி (23). தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான்.

சோமேஷ்வருக்கு பஞ்சாப் மாநிலத்தில் வேலை கிடைத்த நிலையில் அங்கு ஓராண்டுக்கு முன்னர் சென்றுவிட்டார். அவரின் மனைவி சந்தியா மற்றும் மகன் ஜார்கண்டிலேயே வசித்து வந்தனர்.

இந்நிலையில் சந்தியாவுக்கு அவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் கவுதம் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டது. கடந்த 23ஆம் திகதி சந்தியாவும் அவர் குழந்தையும் காணாமல் போனார்கள்.

இது குறித்து தகவலறிந்த சோமேஷ்வர் பொலிசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து பொலிசார் சந்தியாவை தேடி வந்தனர். இந்நிலையில் வறண்ட நிலத்தில் ஒரு பெண் கொன்று புதைக்கப்பட்டதாக பொலிசுக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் அங்கு தோண்டிய போது எலும்புக்கூடாக இருந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டது.

அதன் மீதிருந்த உடையை வைத்து அது தனது மனைவி சந்தியா தான் என சோமேஷ்வர் உறுதி செய்தார்.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கவுதமை பொலிசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சந்தியாவை கொன்றதை ஒப்பு கொண்டார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், கவுதமுக்கு கடந்த 13ஆம் திகதி திருமணம் நடந்துள்ளது, இதற்கு சந்தியா எதிர்ப்பு தெரிவித்து தன்னுடனே அவர் வாழ வேண்டும் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் சந்தியா கழுத்தை நெரித்து கொன்ற கவுதம் பின்னர் அவரை புதைத்துள்ளார் என கூறியுள்ளனர்.

இதனிடையில் சந்தியாவின் மகன் என்ன ஆனான் என்ற தகவல் இன்னும் தெரியாத நிலையில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *