வெளிவந்த தகவல் ! திருமணத்திற்காக சினிமாவிலிருந்து விலகுகிறாரா சரத்குமாரின் மகள்?.. கோபத்தில் நடிகை வரலட்சுமி..

சினிமா

இளம்நடிகையாக நடிகர் சிம்புவின் போடா போடி படத்தில் வாரிசு நடிகையாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இதையடுத்து சில படங்களில் நடித்து உடல் எடை கூடியதால் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படங்களில் நடித்து பிரபலமாகி வருகிறார்.

படங்களில் நடித்து வந்த வரலட்சுமி சில கிசுகிசு வதந்திகளையும் சந்தித்து வருகிறார். நடிகர் விஷாலுடன் காதல் என்றும் வதந்தி வந்ததையடுத்து விஷால் அனிஷா ரெட்டி என்பவரை நிச்சயதார்த்தம் செய்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து முடித்துவிட்டார்.

இதையடுத்து நடிகை வரலட்சுமியை விடாத கிசுகிசு தற்போது சந்தீப் என்ற தொழிலதிபரை காதலிப்பதாகவும் செய்தி பரவியது. மேலும் வரலட்சுமி வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததால் உடனே திருமணம் என்ற செய்தியும் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையறிந்த வரலட்சுமி அதிர்ச்சியாக கோபத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

எனக்கு திருமணம் என்ற தகவலை அறிய நான் கடைசி நபராக இருந்து வருகிறேன் அது ஏன்?. என் திருமணத்திற்கு ஏன் அனைவரும் ஆவளுடன் இருக்கிறார்கள்?. என் திருமண செய்தியை நானே உறக்க கூறுவேன். பத்திரிக்கையில் அப்போது எழுந்துங்கள். நான் திருமணம் செய்து கொள்ளவில்லை சினிமாவில் இருந்தும் விலகவில்லை என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.

வதந்திகளை நேசிக்கிறவள் நான். என்னை பற்றி தெரியாததை அதிலிருந்து தெரிந்து கொள்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *