6 அடி உயர அழகான பெண்ணுடன் 2 அடியில் உள்ளவருக்கு திருமணம்! 13 நாடுகளை சேர்ந்தவர்கள் வாழ்த்திய வீடியோ

மருத்துவம்

 

பாகிஸ்தானை சேர்ந்த 2 அடி உயரம் கொண்ட மாற்றுத்திறனாளிக்கும், ஆறு அடி உயரம் கொண்ட அழகான இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்த நிலையில் அது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்தவர் புர்ஹன் சிஸ்தி. போலியோவால் பாதிக்கப்பட்ட இவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே தனது வாழ்நாளை கழித்து வருகிறார்.

இந்நிலையில் சிஸ்திக்கும், பவுசியா என்ற 6 அடி உயரம் கொண்ட இளம் பெண்ணுக்கும் நோர்வேயில் திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சியில் 13 நாடுகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

மின்சார சக்கரநாற்காலியில் அங்கு மணப்பெண்ணுடன் சிஸ்திக் வந்தது காண்போரை நெகிழ செய்தது.

இது குறித்து மணப்பெண் பவுசியா கூறுகையில், நான் சிஸ்திக்கை மிகவும் நேசிக்கிறேன், அவரும் என் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார்.

என் பெயரை அவர் கையில் பச்சை குத்தியுள்ளார் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *